மாஸ்டர் ஆடியோ லான்ச் : அனிருத் 'மரண மாஸ்' என்ட்ரி... தளபதியின் 'அந்த' பாடலை பாடி 'செம' சப்ரைஸ்..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் மேடையை அலங்கரித்தார். மேடைக்கு வந்த அவர் தளபதியின் 'குட்டி ஸ்டோரி' பாடலை பாடியுள்ளார். மேலும் அவர் ஆடியன்ஸை தன்னுடன் பாடும் படி கூற அனைவரும் சேர்ந்து தளபதிக்கு லைவ் டெடிகேஷன் செய்தனர்.
அதற்கு முன்பு " நான் தான் எப்பவும் பேஸ் வாய்ஸ்ல பேசுவேன்..இப்போ அர்ஜுன் தாஸ் இருக்கிறார் என்று கூறிவிட்டு. " மாஸ்டர் ஆடியோ குட்டி ஸ்டோரியை வைத்து தான் ஆரம்பித்தது. விஜய் சார் நல்ல பாடிட்டாரு. நான் எப்படி பாட போறேனோ" என்று அந்த பாடலை துவங்குகிறார். மக்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு மிகப் பெரிய ஆரவாரம் செய்துள்ளனர்.
அதற்கு பின்பு பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் "விஜய்சேதுபதி சார் நானும் ரௌடி தான் படத்துக்கு அப்புறம் சேர்ந்திருக்கோம்.. BGM-லாம் செமயா போட்ருக்கேன்" என்று சிரிக்கிறார்.
பின்பு "முதல் முறையா லோகேஷ் கனகராஜ் பாட்டு போட்டு ஷூட்டு பண்ணிருக்காரு. அவரு எப்பவுமே ரொம்ப சில் டைப். மொத்தம் 12 பாட்டு "என்று கூறிவிட்டு, தளபதி விஜய் பற்றி பேசும் போது " கத்தி அப்புறம் சேர்ந்திருக்கோம். என்னுடைய பெஸ்ட் கொடுத்திருக்கேன். விஜய் அண்ணா ரொம்ப பாசமானவரு.." என்று கூறியுள்ளார்.