www.garudabazaar.com

Beast Arabic Kuthu: களத்துல குதிச்ச அனிருத்.. 5 Take ஆனாலும் டான்ஸ்ல தெறிக்க விடுறாப்ல.. பரவும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 17, பிப்ரவரி 2022:  பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு அந்த பாடலின் இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Anirudh Arabic Kuthu dance Vijay Beast அனிருத் அரபிக் குத்து

தளபதி 65 - பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில், உருவாகியுள்ள அவரது 65வது படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.

யோகிபாபு, செல்வராகவன் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

முதல் சிங்கிள் ப்ரோமோ

இந்நிலையில் இந்த பாடலின் முதல் சிங்கிள் ப்ரோமோ அண்மையில் வெளியாகி வைரலானது, இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அனிருத் மற்றும் பீஸ்ட் படத்தில் இடம் பெறும் இந்த பாடலை எழுதிய முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் பங்குபெற்ற இந்த ப்ரோமோ ஜாலியான முறையில் உருவாகியிருந்தது. இந்த ப்ரோமோவில், உங்களலாம் நம்ப முடியாது என நடிகர் விஜய், நெல்சன் மற்றும் அனிருத்திடம் போனில் கூறுவார்.

அரபிக் குத்து - ஹலமதி ஹபிபோ பாட்டு

அரபிக் குத்து என பெயரிடப்பட்டு அரபி ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த குத்து பாடலில் ஹலமதி ஹபிபோ எனும் வரிகள் அனுபல்லவியாக ரிப்பீட் மோடில் வருவன. இந்த வரிகள், பாடல் வெளியானது முதலே பலருக்கும் இஷடமான வரிகளாகிவிட்டதை அடுத்து, அனைவருமே இந்த வரிகளை தொடர்ந்து முனுமுனுத்து வருகின்றனர். இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

இணையத்தில் வைரல்.. அரபிக் குத்து ஃபீவர்

இணையத்தில், இந்த பாடல் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் ஃபீவர் இருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி ஒரே நாளில் மில்லியன் கணக்கை தாண்டி ரெக்கார்டு படைக்கத் தொடங்கியதை அடுத்து, பலருக்கும் பீஸ்ட் ஃபீவருடன் அரபிக் குத்து ஃபீவர் என்று புதிய ஃபீவரும் சேர்ந்து வந்துவிட்டது. இந்நிலையில் ரசிகர்களால் இந்த படத்தை திரையரங்கில் காண காத்திருக்க முடியவில்லை. இதனிடையே சிறுவர்கள் எல்லாம் கூட இந்த பாடலை போலவே காஸ்டியூம் அணிந்து, ஸ்டெப் போட்டு கலக்கி வருகின்றனர்.

களத்தில் குதித்த அனிருத்

இந்நிலையில் அனிருத் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் அவரே தமது ட்விட்டரில் பதிவிட்டு, “இந்த ஒரு ஸ்டெப்பை முயற்சி பண்ணுவதற்கு 5 டேக் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்டெப் சரியா வரவில்லை” என்று ஃபன்னாக கேப்ஷன் போட்டிருக்கிறார்.

அனி.. நல்லா ஆடுறீங்களே?

ஆனால் இந்த வீடியோவை பார்த்த பலரும், ‘என்ன அனி இப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்குள்ள இப்படி ஒரு டான்சர் இருக்குறதே தெரியாம போச்சே? வேற லெவல்ல சம்பவம் பண்றீங்களே? அநேகமாக நீங்களே நடிக்கலாம், அவ்வளவு அருமையாவும் துடிப்பாவும் ஆடுறீங்க, பார்க்கவே செம எனர்ஜியாக இருக்கு’ என்றெல்லாம் கமெண்ட் பாக்ஸ்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

தலைவர் 169

இதனிடையே இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் 179 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தையும் பீஸ்ட்,  அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Also Read: தனுஷ்-உடன் ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் இளம் பெண் யாரு? வைரல் ஃபோட்டோவின் பின்னணி!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Arabic Kuthu dance Vijay Beast அனிருத் அரபிக் குத்து

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, Arabic Kuthu, ரஜினிகாந்த், Beast, Nelson Dilipkumar, Thalaivar169, Thalapathy65 will find this news story useful.