www.garudabazaar.com

"ரியல் வீடியோ'வ விட இதுல செமயா ஆடுறாங்களே.." தனியாக ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த திரைப்படம் 'மாஸ்டர்'. கடந்த 2021 ஆம் ஆண்டு, பொங்கல் ரிலீசாக வந்த மாஸ்டர், மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

beast pooja hegde arabic kuthu dance gone viral in social media

'வலிமை' படத்தின் ஆந்திரா - தெலுங்கானா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

இதனைத் தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' என்னும் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார்.

இந்த படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான 'டாக்டர்' திரைப்படமும், அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

ஃபர்ஸ்ட் பிரோமோ

அந்த வகையில், பீஸ்ட் திரைப்படமும் பெரிய ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பிரோமோ கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது. அதில், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகரும் பாடலாசிரியருமான சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து அடிக்கும் லூட்டி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை குவித்திருந்தது.

beast pooja hegde arabic kuthu dance gone viral in social media

அரபிக் குத்து

இதனைத் தொடர்ந்து, காதலர் தினமான நேற்று, 'அரபிக் குத்து' என பெயரிடப்பட்ட முதல் சிங்கிள் வெளியாகியது. டிரெண்ட்டிற்கு ஏற்ற வகையில், பாடலை உருவாக்கும் அனிருத், இந்த பாடலையும் அதே போல உருவாக்கியிருந்தார். பாடல் ரிலீஸ் ஆனது முதலே, சமூக வலைத்தளங்களில் இது பற்றி, அதிகம் கருத்துக்களை ரசிகர்கள் வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

விஜய் - பூஜா ஹெக்டே

அதே போல, இதன் லிரிக் வீடியோவில், நடிகர் விஜய் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து ஆடும் வீடியோக்களும் இடையில் இடம்பெற்றிருந்தது. விஜய் - பூஜா ஹெக்டே போல, நடன அசைவுகளை ஆடி, ரசிகர்கள் வீடியோவாக, இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

beast pooja hegde arabic kuthu dance gone viral in social media

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனியாக கடலுக்கு நடுவே, கப்பல் ஒன்றில், 'அரபிக் குத்து' பாடலுக்கு ஆடும் வீடியோவை, சன் பிக்சர்ஸ் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லிரிக் வீடியோவில் வருவதை விட, இதில் பூஜா ஹெக்டே மிகவும் கூலாக ஆடியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

beast pooja hegde arabic kuthu dance gone viral in social media

அரபிக் குத்து வீடியோவைப் போல, பூஜாவின் நடன வீடியோவும் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் உடனான திருமண பிரிவுக்கு பின் பொது தளத்தில் முதல் முறையாக தனது பெயரை மாற்றிய ஐஸ்வர்யா!

தொடர்புடைய இணைப்புகள்

beast pooja hegde arabic kuthu dance gone viral in social media

People looking for online information on Arabic kuthu dance, அரபிக் குத்து, பீஸ்ட், பூஜா ஹெக்டே, விஜய், Beast, Pooja Hegde, Vijay will find this news story useful.