www.garudabazaar.com

இப்ப குழந்தைகளும் பீஸ்ட் மோடுல தான்.. வைரல் குட்டி விஜய், அனிருத், பூஜா - அரபிக் குத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65.

Beast First Single Arabic Kuthu chilren viral cover song

இந்த திரைப்படத்திற்கு, ‘பீஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனிருத், இசையமைக்க, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வரிகளில், தற்போது வெளியாகியிருக்கிற, ‘அரபிக் குத்து’ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.

Beast First Single Arabic Kuthu chilren viral cover song

25 மில்லியன் பார்வைகளை தாண்டி

இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் பார்வைகளை தாண்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை பலரும் இமிட்டேட் செய்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

அப்படித்தான் இந்த பாடலை தற்போது சின்னஞ்சிறு குழந்தைகள் இமிடேட் செய்து அரபிக் குத்து கவர் சாங் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். குட்டி விஜய்களும், குட்டி பூஜா ஹெக்டேக்களும் கண்கவர் ஆடை, ஒப்பனைகளில் தெறிக்க விடும் இந்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Beast First Single Arabic Kuthu chilren viral cover song

ஹலமதி ஹபிபோ

4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடல், பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான, முதல் 40 நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையை தாண்டியுள்ளது. ‘ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி’ என தொடங்கும் இந்த பாடலின்  ஹலமதி ஹபிபோ (halamathihabiboo) என்கிற வார்த்தைகள் அனுபல்லவியாக ரிப்பீட் ஆகின்றன.

Beast First Single Arabic Kuthu chilren viral cover song

ரஜினிகாந்த்துடன் இணையும் நெல்சன்

இதனிடையே இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் 179 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தையும் பீஸ்ட்,  அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Beast First Single Arabic Kuthu chilren viral cover song

People looking for online information on Anirudh Ravichander, Arabic Kuthu, அரபிக் குத்து, Beast, Beastfirstsingle, Halamithi Habi Boo, Jonita Gandhi, Thalapathy Vijay, ThalapathyVijay, Vijay Actor will find this news story useful.