www.garudabazaar.com

'அரபிக் குத்து' பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ.. லைக்ஸ்களை அள்ளும் சித்து -ஸ்ரேயா ஜோடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அரபிக் குத்து பாட்டிற்கு சித்து -ஸ்ரேயா ஜோடி நடனம் ஆடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

video for 'Arabic kuthu' song .. Sidhu-Shreya duo win likes!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.

அரபிக் குத்து பாடல்

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'அரபிக் குத்து' (Arabic kuthu) என்கிற பாடலின் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக நேற்று, காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியானது.

video for 'Arabic kuthu' song .. Sidhu-Shreya duo win likes!

சித்து - ஸ்ரேயா ஜோடி நடனம்

விஜய்யின் (Vijay) மெர்சலாக, ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆகி வருகிறது.  சிவகார்த்திகேயனின் லிரிக்ஸில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த அரபிக் குத்து பாடலுக்கு சமூகவலைதளங்களில் பலரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல சின்னத்திரை ஜோடியான சித்து, ஸ்ரேயா இருவரும் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

video for 'Arabic kuthu' song .. Sidhu-Shreya duo win likes!

அரபிக் குத்து பாடல் சாதனை

இன்ஸ்டா ரீல்ஸில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரீல் ஜோடியான சித்து, ஸ்ரேயா அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் இந்த காதல் ஜோடி அவ்வப்போது வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அரபிக் குத்து பாடலுக்கு ரொமாண்டிக்கா இருவரும் சேர்ந்து ஆடும் நடனம் பலரையும் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.

 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

video for 'Arabic kuthu' song .. Sidhu-Shreya duo win likes!

People looking for online information on Arabic Kuthu, Beast, Instagram, Nelson DileepKumar, Pooja Hegde, Reels Video, Seriol Actor, Siddhu, Sivakarthikeyan, Sreya, Vijay will find this news story useful.