சூப்பர் ஹீரோ ஸ்டைலில் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்..! - டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 13, 2019 10:30 AM
'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
மேலும் ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு இந்திய திரைப்படத் தணிக்கைத்துறை U சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹீரோ ஸ்டைலில் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்..! - டிரெய்லர் இதோ வீடியோ