“சம்பவம் நடந்த நாள்..!” - Mr.Cool Husband குறித்து விஜே மணிமேகலை Emotional போஸ்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 06, 2019 10:39 AM
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான மணிமேகலை ரசிகர்கள் மத்தியில் தனது கலகலப்பான பேச்சால் மிகவும் பிரபலமானவர். இவர் தனது இரண்டாம் ஆண்டு திருமண நாள் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளினியான மணிமேகலை நடன இயக்குநரான காதர் ஹுசைனை என்பவரை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு டிச.6ம் தேதி திருமணம் செய்து கொண்டார். வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்ட இந்த காதல் ஜோடி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சம்பவம் நடந்த நாள். இந்த ஜென்மத்தோட சிறந்த நாள். இந்த 2 ஆண்டுகளில் நிறைய கஷ்டங்களை சந்தித்த போதிலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எல்லா கஷ்டங்களையும் சிரிப்புடனே எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுத்திருக்கிறாய். நாம பிளான் போட்ட மாதிரி சில்வர் கலர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குற வரைக்கும் ஓயக்கூடாது.. அடுத்த ஆண்டு ஆனந்தமான வாழ்க்கையை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன், தனக்கு திருமணம் நடந்த வீடியோ ஒன்றையும் மணிமேகலை பகிர்ந்துள்ளார். இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் மணிமேகலை - ஹுசைன் தம்பதிக்கு வாழ்த்துக்கள்!