www.garudabazaar.com

முதல்முறையாக ரன்பீர் கபூருக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..! இது வேறலெவல் சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல்முறையாக ரன்பீர் கபூருக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை ஜோடியாகி உள்ளார். 

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

Also Read |  BOX OFFICE: ' RRR' படத்தின் ஒரு மாத உலகளாவிய மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மகன் மற்றும் மூத்த நடிகர் - இயக்குனர் ராஜ் கபூரின் பேரன் ஆவார்.

ரன்பீர் கபூர் ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பையும் நடிப்பையும் முறையாக கற்றவர். பின்னர் அவர் பிளாக் (2005) திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவி இயக்குனரானார் மேலும் பன்சாலியின் காதல் திரைப்படமான (தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்) சாவரியா (2007) மூலம் நடிகராக அறிமுகமானார்.

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

ரன்பீர் கபூர் 2009 ஆம் ஆண்டில் வேக் அப் சித், அஜப் பிரேம் கி கசாப் கஹானி மற்றும் ராக்கெட் சிங்: ராஜநீதி (2010) , ராக்ஸ்டார் (2011) ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். இதில் ராக்ஸ்டார் ரன்பீர் கபூரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. A. R ரகுமான் இசையில் ரூமியின் சூஃபி ததுவங்களின் அடிப்படையில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆனது.

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

பர்ஃபி! (2012), படத்தில் காது கேளாத மற்றும் ஊமை மனிதராக நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். பின் யே ஜவானி ஹை தீவானி (2013) இல் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ரன்பீரை கொண்டு சென்றது. பிரிதமின் இசையும், நம்ம கோயமுத்தூர் காரரான வேலாயுதம் மணிகண்டனின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

ஏ தில் ஹை முஷ்கில் (2016), 2018 ஆம் ஆண்டில், ராஜ்குமார் ஹிரானியின்  திரைப்படமான சஞ்சுவில் சஞ்சய் தத்தாக நடித்து, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக இந்த படத்தை ரன்பீர் மாற்றினார். ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா படத்தில் நடிக்கிறார். லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.

இதில் அனிமல் படத்தின் படப்பிடிப்பு இன்று (22.04.2022) ஆரம்பமாகி உள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் இந்தி ரீமேக் கபீர் சிங்கின் மூலம் மிகப் பெரிய பிளாக்பஸ்டரை வழங்கியவர். இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து இப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் அனிமல் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பும் இன்று இமயமலையில் தொடங்கியது. அனிமல் படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும் பான் இந்தியா திரைப்படமாகும். இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் புஷ்பா, கீதா கோவிந்தம், சுல்தான் படங்களில் நடித்தவர். தமிழில் தற்போது விஜய்யின் 66வது படத்தில் நடித்து வருகிறார்.

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

ஆகஸ்ட் 11, 2023 அன்று சுதந்திர தின வார இறுதியில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

முதல்முறையாக ரன்பீர் கபூருக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..! இது வேறலெவல் சம்பவம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir Kapoor Rashmika Mandanna Animal Movie Shooting Started

People looking for online information on Animal Movie, Animal Movie Updates, Ranbir Kapoor, Rashmika Mandanna will find this news story useful.