RRR Others USA
www.garudabazaar.com

"இதுக்கு மேல முடியாது!" BB Ultimate-ல் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி எடுத்த பரபரப்பு முடிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து, சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென வெளியேறியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suresh chakravarthy exits from bb ultimate amid health issues

Cute ஸ்மைல் நயன்தாரா… Mass ஆக்ஷன் பிருத்விராஜ் – 'பிரேமம்' இயக்குநரின் Gold பட டீசர்!

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த ஐந்து பிக்பாஸ் சீசன்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, முந்தைய போட்டியாளர்களின் பட்டியலில் இருந்து சிலரைத் தேர்வு செய்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

24 மணி நேரமும் பிக்பாஸ்

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேயர்களால் கண்டு களிக்க முடியும். இதனால், ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை எகிற வைக்கத் தவறுவதில்லை.

சுரேஷ் சக்ரவர்த்தி

அந்த வகையில், பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் இருந்த சுரேஷ் சக்ரவர்த்தி, திடீரென போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், சுரேஷ் சக்ரவர்த்தி பங்கு எடுத்திருந்தார். மிகச் சிறந்த போட்டியாளரான இவர், பல இடங்களில் தன்னை ஒரு வெற்றியாளராகவும் நிரூபித்துள்ளார்.

Suresh chakravarthy exits from bb ultimate amid health issues

கலகல போட்டியாளர்

அதே போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று வயதானவர்கள் அதிகம் கலந்து கொண்டாலும், சுரேஷ் சக்ரவர்த்தியை போல யாரும் நிலைத்து நின்று பெயரை சம்பாதிக்கவில்லை. இக்காலத்து இளைஞர்களுடன், சற்று இணங்கி ஜாலியாக ஆடும் சுரேஷ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களமிறங்கி இருந்தார்.

வைல்ட் கார்டு என்ட்ரி

முதலில் அவர் அவுட்டாகி வெளியே சென்றாலும், வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்து, மீண்டும் அற்புதமாக கேம் ஆடி வந்தார். இந்நிலையில் தான், திடீரென சுரேஷின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கார் டாஸ்க் ஒன்று நடைபெற்றிருந்தது. இதில், சுமார் 8 மணி நேரம் காருக்குள் இருந்து பாலாஜி வெற்றி பெற்றிருந்தார்.

உடல்நிலையில் பாதிப்பு?

இதனிடையே, இந்த டாஸ்க்கிற்கு பிறகு, சுரேஷின் உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, போட்டியின் பாதியில் இருந்து தானே விலகுவதாகவும் சுரேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, சுரேஷிற்கு உடல்நிலை பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Suresh chakravarthy exits from bb ultimate amid health issues

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தும், அதனை வெற்றி வாய்ப்பாக மாற்ற முடியவில்லை என்றாலும், இது நாள் வரை சுரேஷ் ஆடிய ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, தனது உடம்பை பார்த்து கொள்ளவும், ரசிகர்கள் அக்கறையுடன் தெரிவித்து வருகின்றனர்.

3 வருஷத்துக்கு முன்.. விஜய்க்கு மூதாட்டி எழுதிய உருக்கமான கடிதம்.. "ஏன் அனுப்பல..?"

"இதுக்கு மேல முடியாது!" BB ULTIMATE-ல் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி எடுத்த பரபரப்பு முடிவு.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suresh chakravarthy exits from bb ultimate amid health issues

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, SilambarasanTR, Suresh Chakravarthy, Vijay Television will find this news story useful.