RRR Others USA
www.garudabazaar.com

மாலத்தீவு வெயிலில் சறுக்கி விளையாடும் சன்னி.. நம்ம மனசும்‌ சறுக்குதே.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை சன்னி லியோன்.

Sunny leone enjoys her vacation at maldives video gone viral

ஏதாவது பொது நிகழ்ச்சிக்கு வேண்டி, எந்த மாநிலத்துக்கு சன்னி லியோன் சென்றாலும், அவரை பார்க்க வேண்டி ரசிகர்கள் கூட்டமே அலை மோதும்.

தன்னுடைய கவர்ச்சி என்பதை எல்லாம் தாண்டி, தான் ஒரு சிறந்த நபர் என்பதையும் பல முறை நிரூபித்துள்ளார் சன்னி லியோன்.

திருமண வாழ்க்கை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், வாடகைத் தாய் மூலம், இரட்டை குழந்தைகளையும் சன்னி லியோன் மற்றும் டேனியல் ஆகியோர் வளர்த்து வருகின்றனர்.

திரைப்படங்களிலும் பிசி

அதே போல, ஹிந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அதிக திரைப்படங்களில் அதிகம் பிசியாகவும் சன்னி லியோன் நடித்து வருகிறார். தமிழில், 'OMG' மற்றும் மலையாளத்தில் 'ஷீரோ' ஆகிய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இன்ஸ்டாவில் செம ஆக்டிவ்

ஒரு பக்கம், சினிமா என தீவிரமாக இருக்கும் சன்னி லியோன், இன்னொரு பக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் தினந்தோறும் நிகழும் விஷயங்களை இன்ஸ்டா மூலம், ரசிகர்களுக்கு அறிவித்து விடுகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன், தனது பெயரை பச்சைக் குத்தி வைத்திருந்த ரசிகர் ஒருவரின் வீடியோவை, மிகவும் ஃபன்னாக வெளியிட்டிருந்தார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் சன்னி

கோடை காலம் என்பதால், பல நடிகைகளும் வெப்பத்தில் இருந்து விடுபட வேண்டி, மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்கு விடுமுறையை கழிக்கச் சென்று வருகின்றனர். அந்த வகையில், நடிகை சன்னி லியோனும் மாலத்தீவு சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக, மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் சன்னி லியோனுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.

வெயிலுக்கு இதமான குளியல்

அப்படி தற்போது அடிக்கும் வெயிலுக்கு மிகவும் இதமாக, சன்னி லியோன் சறுக்கிக் கொண்டே சென்று குளிக்கும் வீடியோ ஒன்றை சன்னி லியோன் பகிர்ந்துள்ளார். "Slide இருக்கும் போது படிகளை ஏன் பயன்படுத்த வேண்டும்" என கேப்ஷனிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ, தொடர்ந்து பல லைக்குகளை அள்ளி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone enjoys her vacation at maldives video gone viral

People looking for online information on Maldives, Maldives Holidays, Sunny, Sunny Leone, Viral video will find this news story useful.