கர்ப்பமானதை அறிவித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 12:34 PM
கன்னடத்தில் வெளியான 'லூசியா' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்த படம் தமிழில் 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

இவர் தமிழில் 'நெருங்கிவா முத்தமிடாதே', 'நிபுணன்', 'சோலோ' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவராக அறியப்படுகிறார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தனது கர்ப்பமானது குறித்து எழுதியுள்ள பதிவில், ''இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். சர்க்கஸ் போன்ற இந்த உலகத்துக்கு வரவேற்க காத்திருக்கிறேன்''என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Sruthi Hariharan, Pregnancy