www.garudabazaar.com

புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியான பிரபல முன்னணி நடிகை! வெளிவந்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் பிரபல நடிகை ஹீரோயினாக இணைந்துள்ளார்.

Anu Emmanuel Doing a Role in Karthi Starring Japan Movie

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. அதிதி ஷங்கர் பகிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட் BTS போட்டோ! வைரல்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாக உள்ளது.

'ஜப்பான்' படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை காலை சினிமா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Anu Emmanuel Doing a Role in Karthi Starring Japan Movie

தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர்.  'ஜப்பான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

Anu Emmanuel Doing a Role in Karthi Starring Japan Movie

25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், 'கோலி சோடா', 'கடுகு' ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், 'ஜப்பான்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Anu Emmanuel Doing a Role in Karthi Starring Japan Movie

நடிகர் கார்த்தி ஜோடியாக பிரபல நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த "நம்ம வீட்டு பிள்ளை", விஷால் நடித்த "துப்பறிவாளன்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also Read | கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. பூஜை அன்றே வெளியான படத்தின் தலைப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Anu Emmanuel Doing a Role in Karthi Starring Japan Movie

People looking for online information on Anu Emmanuel, Japan Movie, Karthi will find this news story useful.