www.garudabazaar.com
iTechUS

அதிர்ச்சி!! டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்சர் பிறந்த நாளில் மரணம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் டான்சர் ரமேஷ். சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரமேஷ் பகிரும் வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகவும் செய்யும்.

Popular dancer ramesh passed away in chennai

                                            Image Credit : Zee Tamil

Also Read | அஜித், சூர்யாவுக்கு குரல் கொடுத்தவரா.? பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் திடீர் மரணம்..

பலரின் ஃபேவரைட் நபராகவும் வலம் வந்த டான்சர் ரமேஷ், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு பல பிரபலங்களையும் தனது நடனத்தால் கவரவும் செய்திருந்தார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த பக்கம் திரும்பினாலும் ரமேஷின் நடன வீடியோக்களை நாம் நிறைய காணவும் முடியும். தொடர்ந்து தனது நடன திறமையால் ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்தா டான்சர் ரமேஷ்.

Popular dancer ramesh passed away in chennai

சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றியிருந்த டான்சர் ரமேஷ், அதில் சில இடங்களில் அசத்தலாக நடனமாடவும் செய்திருந்தார். இதுவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Popular dancer ramesh passed away in chennai

இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான இன்று (27.01.2023) விபரீத முடிவை எடுத்து டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் தற்போது உயிரிழந்துள்ளது, அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

Also Read | மிஸ்ஸியம்மா முதல் தூங்காதே தம்பி தூங்காதே வரை.. பழம்பெரும் நடிகை ஜமுனா மரணம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Popular dancer ramesh passed away in chennai

People looking for online information on Dancer, Dancer Ramesh, Ramesh will find this news story useful.