o2

”உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்… ” கமலுக்கு நன்றி தெரிவித்து இமான் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் திருமூர்த்தியை நடிகர் கமல்ஹாசன் ஏ ஆர் ரஹ்மானின் இசைப்பள்ளியில் படிக்க வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Music director D imman emotional post on Thirumoorthuy

Also Read | விக்ரம் படத்தின் 25வது நாள்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இதுவரை காணாத மாஸ் போஸ்டர்!

பாடகர் திருமூர்த்தி

இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியான விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை மாற்றுத் திறனாளியான பாடகர் திருமூர்த்தி பாடி அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அவரின் அந்த வீடியோ இணையத்தில் கவனம் பெறவே இசையமைப்பாளர் இமான் அவரை அழைத்து தன் இசையில் ஒரு பாடலை பாட வைத்தார். ஜீவா நடித்த சீறு படத்தில் திருமூர்த்திக்கு பாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பெரிதாக வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கவில்லை.

Music director D imman emotional post on Thirumoorthuy

பத்தல பத்தல

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்துல் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி  ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை ஒரு வாளியில் தாளம் போட்டவாறு  திருமூர்த்தி பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரை அழைத்து சந்தித்த நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியின் இசை ஆர்வத்தால் அவரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்த்து படிக்கவைப்பதாகவும், அதற்கான பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த அறிவிப்பை அடுத்து பலரும் நடிகர் கமலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Music director D imman emotional post on Thirumoorthuy

இமான் நெகிழ்ச்சி

இந்நிலையில் திருமூர்த்தியை திரையுலகில் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் இமான் இதுகுறித்து “பாடகர் திருமூர்த்தியின் அனைத்து வளர்ச்சிகளிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நீங்கள் மேலும் மேலும் உயரவும்! வலிமைமிக்க சாதனைகளை நோக்கி உங்களின் ஒவ்வொரு சிறு அடியின் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான ஆதரவிற்கு கமல் சார் அவர்களுக்கு நன்றி!” என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

Also Read | Photo: அஜித்குமாரின் AK61 பட ஷூட்டிங்.. வெளியான மஞ்சு வாரியரின் செம்ம சூப்பர் லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

Music director D imman emotional post on Thirumoorthuy

People looking for online information on D Imman, Kamal Haasan, Music director D imman, Singer Thirumoorthuy, Thirumoorthuy, Vikram Movie will find this news story useful.