வழக்கில் ஜெயிச்சதை கொண்டாட பிரம்மாண்ட விருந்து கொடுத்த ஜானி டெப்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் இடையேயான வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தார். இந்நிலையில் இதனை கொண்டாடும் விதத்தில், இங்கிலாந்தில் உணவகம் ஒன்றில் பிரம்மாண்ட விருந்து ஒன்றினை நடத்தியுள்ளார் டெப்.

Johnny Depp leaves 49 lakh tip after dinner in Birmingham

Also Read | பிரபல STAR போட்டோகிராபருடன் இணைந்த நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த LATEST போட்டோஷூட் PHOTOS

ஜானி டெப்

1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Johnny Depp leaves 49 lakh tip after dinner in Birmingham

மீண்டும் வழக்கு

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வெற்றி

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Johnny Depp leaves 49 lakh tip after dinner in Birmingham

விருந்து

இங்கிலாந்தின் பெர்மிங்கம் பகுதியில் அமைந்துள்ளது வாரணாசி ரெஸ்டாரண்ட். இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்திய உணவகமான இதில் தான் ஜானி டெப்  தனது  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார். ஜானி டெப் மற்றும் அவரது நண்பரும் கிட்டார் கலைஞருமான ஜெஃப் பெக் உள்ளிட்ட 20 பேர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். இதற்காக, சிறப்பு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பணியில் ஈடுபட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய இந்த பிரம்மாண்ட உணவகத்தை சுற்றிலும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். இந்த விருந்திற்காக ஜானி டெப் 62,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 48.1 லட்சம் ரூபாய்) செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது.

Johnny Depp leaves 49 lakh tip after dinner in Birmingham

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டுடனான வழக்கில் தான் வெற்றிபெற்றதை அடுத்து, இங்கிலாந்தில் ஜானி டெப் பிரம்மாண்ட பார்ட்டி வைத்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Also Read | நயன்தாராவுடன் திருமணம் எப்போ? எங்க? அதிகாரபூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

Johnny Depp leaves 49 lakh tip after dinner in Birmingham

People looking for online information on ஜானி டெப், Birmingham, Dinner, Johnny Depp will find this news story useful.