மொட்டையடித்த பிரபல ஹீரோயின் - கணவர் வெளியிட்ட ஃபோட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் சுந்தர்.சி முதன்முறையாக ஹீரோவாக நடித்த 'தலைநகரம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜோதிர்மயி. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பிரபல நடிகையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த்துடன் 'சபரி', 'நான் அவனில்லை', 'அறை எண் 305ல் கடவுள்', 'பெரியார்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஜோதிர்மயி பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமாகிய அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அமல் நீரட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிர்மயி மொட்டையடித்துள்ள ஃபோட்டோவை பகிர்ந்து தமசோமா ஜோதிர்கமய என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Jothirmayi, Instagram, Amal Neerad