''கொரோனா வந்து செத்தாலும் பரவால்ல... ஒரு சினிமா தொழிலாளரின் வேதனை..'' - பிரபல இயக்குநர்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விதமான திரைப்பட படப்படிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம் திரைப்பட தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநரும் ஃபெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ''தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள 25 ஆயிர உறுப்பினர்களில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று தினசரி ஊதியம் பெற்று வாழக்கை நடத்தும் பரிதாபமான நிலையில் உள்ள தொழிலாளர்கள் ஆவார்.
இன்று லைட்மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் எனக்கு ஃபோன் செய்து , சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் பசியால் சாவதை விட நான் கொரோனா வைரஸால் செத்தாலும் பரவாயில்லை என்று வேதனையுடன் கதறிய போது ஏற்பட்ட வேதனைகளை என்னால் வார்த்தைகளால் எழுத முடியாது.
நடிகர் நடிகைகலள், இயக்குநர்கள், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன். ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். பத்தாயிர உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால்ஒரு மூட்டை அரிசி ரூ.1250 என்றாலும் இரு கோடி ரூபாய் ஆகிறது.
கருணை உள்ளம் படத்தை தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர் வாழ்வு அளிப்பீர் நிதி அளிப்பீர் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.