"அவர் கத்துக்கொடுத்த பாடம்..".. மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு இயக்குனர் SS.ராஜமௌலி உருக்கம்..!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனர் SS.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
Also Read | உலகின் உயரமான முருகன் சிலை கொண்ட கோவிலில் வழிபாடு செய்த நடிகர் யோகி பாபு..
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல இயக்குனர் SS.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் கிருஷ்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த பதிவில்,"சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காருவின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக தெலுங்குத் திரையுலகில் கிருஷ்ணா காருவின் பங்களிப்பு அனைவரும் அறிந்ததே. மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவது, புதிய தொழில்நுட்பங்கள் மீதான அவரது அன்பும் ஆர்வமும்தான். முதல் 70mm படம், முதல் கலர் படம் மற்றும் பலவற்றின் மூலம் தெலுங்கு சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார். முக்கியமாக புதிய பாதையில் செல்ல பயப்பட வேண்டாம் என்று கற்றுக் கொடுத்தார். அவருடைய அளப்பரிய பங்களிப்புகளுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த துயர் மிகுந்த நேரத்தில் மகேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Extremely saddened to hear about the sudden demise of Superstar Krishna Garu.
Krishna garu's contribution to the telugu film field as an actor in 300+ films, director, and producer are well known.
What sets him apart from the rest is his love and passion for newer technologies.
— rajamouli ss (@ssrajamouli) November 15, 2022
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Mahesh Babu Father Veteran Actor Krishna Dies
- Mahesh Babu Father Krishna Ghattamnaneni Hospitalized
- SS Rajamouli RRR Movie Subimitted For Oscars
- Sitara Ghattamaneni Crying On The Lap Of Mahesh Babu
- Mahesh Babu Mother Ghattamaneni Indira Devi Passes Away
- Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update
- RK Suresh Doing A Role In Super Star Mahesh Babu SSMB 28
- Mahesh Babu New Look For SSMB 28 Movie Shooting Update
- Brahmastra Nagarjuna SS Rajamouli Ranbir Kapoor In BB Jodigal 2
- SS Rajamouli Speech Brahmastra: Part One – Shiva
- Ranbir Kapoor Nagarjuna SS Rajamouli In Chennai For Brahmastra Part 1
- Mani Ratnam Thanked SS Rajamouli For PS 1 Here Is Why
தொடர்புடைய இணைப்புகள்
- திடீர்னு பிரிந்த அம்மாவின் உயிர் 😥 விடை தெரியாமல் நின்ற Mahesh Babu 😥 இவர பாக்க கஷ்டமா இருக்கு
- ஆசை அம்மாவுக்கு இறுதிச்சடங்கு செய்யும் MAHESH BABU 💔 ஆயிரம் பேரு இருந்தாலும் அம்மா மாதிரி வருமா
- 🔴 Mahesh Babu தாயார் திடீர் மரணம்!.. சோகத்தில் ரசிகர்கள் | RIP
- Sarkaru Vaari Paata 🎵 Kalaavathi பாட்டு ஏன் Hit ஆச்சு ? Varisu Thaman
- 🔴LIVE: DHANUSH-ஐ கொண்டாடும் HOLLYWOOD! 🔥தமிழர்களை தலை நிமிர வைத்த தருணம் ❤️ The Gray Man Premiere
- "KAMAL Sir Acting பத்தி பேச எனக்கு தகுதி இல்ல.." MAHESH BABU Open Talk | VIKRAM
- നടൻ മഹേഷ് ബാബുവിനെ Twitter ൽ ഫോളോ ചെയ്തത് സാക്ഷാൽ ബിൽ ഗേറ്റ്സ്.
- അമ്മ നേതൃത്വത്തിനെതിരെ ഗണേഷ് കുമാർ എം എൽ എ
- படுத்துக்கிட்டே Keerthy Suresh பண்ண Dubbing😍 Vaashi Keerthy Suresh Dubbing Video
- Pearle-യുടെ Rapid Fire Round-ൽ കുടുങ്ങിയ Ram Charan-ഉം NTR-ഉം 😅👌
- Keerthy Suresh மேல பைத்தியமா இருக்கோம் Bro 🥳🔥தலைவிக்காக இத கூட பண்ண மாட்டோமா 😎
- Sarkaru Vaari Paata Movie Review | Mahesh Babu, Keerthy Suresh | Sarkaru Vaari Paata Public Review