www.garudabazaar.com

ரோகினி திரையரங்கில் AK வலிமை"Selfie Spot".. வேற மாரி தெறிக்கவிடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர இருக்கும் "வலிமை" திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

AK valimai Selfie Spot placed at Rohini Theatre

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் மற்றும் போஸ்டர்கள் முதல் அப்டேட்டாக வெளிவந்தது. அதன் பிறகு, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அவை அனைத்தும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு வெளிவந்த "வேற மாரி" பாடல் மற்றும் "அம்மா பாடல்" ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இரு பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

AK valimai Selfie Spot placed at Rohini Theatre

படத்தைப் பற்றி ஒவ்வொரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில், படத்தின் புது புது புகைப்படங்கள் ரசிகர்களை பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அஜித் இரு வேடங்களில் நடிக்கிறாரா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஸ்டண்ட் காட்சிகள், பைக் ரேஸிங் என்று பல வித்தைகளை இப்படத்தில் கையாண்டுள்ளனர். கண்டிப்பாக இப்படம் மாஸ் ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தின் விசில் தீம் பல ரசிகர்களின் ரிங்க்டோனாகவும் இருந்து வருகிறது. இப்படத்தை போனிகபூருடன் சேர்ந்து ஜி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன், ஹுமா குரேஷி நடிக்கிறார். இப்படத்தை நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

AK valimai Selfie Spot placed at Rohini Theatre

இயக்குனர் H.வினோத் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் பலர் இப்படம் வெற்றி பெற வேண்டி செய்துவரும் செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சமீபத்தில் சபரிமலையில் வலிமை பல பேருடன் ரசிகர் தனது வேண்டுதலை நிறைவேற்றியதும், சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதேபோல் அஜித் ரசிகர்கள் சார்பில் பல சமூக தொண்டுகளும் செய்து வருகின்றனர். தற்போது அஜித் ரசிகர்கள் சார்பில் ரோகிணி திரையரங்கில் "I love AK"  என்ற Selfie Spot உருவாக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் Selfie  எடுத்து பகிர்ந்து வருகின்றனர். படம் வெற்றி பெற சினிமா ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

AK valimai Selfie Spot placed at Rohini Theatre

People looking for online information on அஜித், வலிமை, I Love AK, Rohini theatre, Selfie Spot, Valimai will find this news story useful.