www.garudabazaar.com

#Thalaivar169 : நெல்சனைத் தொடர்ந்து, கொஞ்ச நேரத்துல ரஜினி செய்த மாற்றம்??.. பத்திக்கிட்ட ட்விட்டர்.‌

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸானது.

Thalaivar 169 Nelson Rajinikanth viral change in Twitter

சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்ததை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கக்கூடிய "தலைவர் 169 (தற்காலிகப் பெயர்)" திரைப்படம் குறித்த அடுத்தகட்ட தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Thalaivar 169 Nelson Rajinikanth viral change in Twitter

இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட தகவல்கள் குறித்த அப்டேட்கள் இன்னும் துல்லியமாக வந்து சேராத நிலையில், நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தை இயக்கப் போகும் தகவல்கள் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் தாம் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் திரைப்படங்களை தொடர்ந்து, அடுத்ததாக தாம் இயக்கப் போகும் ரஜினிகாந்த் நடிக்கக்கூடிய "தலைவர் 169" திரைப்படத்தையும் சேர்த்திருக்கிறார்.

இந்த விஷயம் வைரலாகி இணையதளத்தில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் கவர் ஃபோட்டோவாக "தலைவர் 169" படத்துக்கான முன்னோட்ட வீடியோவில் தான் தோன்றிய தம்முடைய லுக் ஃபோட்டோவை பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த விஷயம் இப்போது இன்னும் ட்ரெண்டாகி வருகிறது.

Thalaivar 169 Nelson Rajinikanth viral change in Twitter

இதனிடையே, ரசிகர்கள் பலரும் தன்னுடைய ட்விட்டர் கவர் ஃபோட்டோவை ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியே மாற்றி விட்டார் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 திரைப்படத்துக்கான அறிவிப்பு வீடியோ வெளியாகி இருந்தது. இந்த வீடியோவில் ரஜினிகாந்த், இந்த  திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சன் மூவரும் கோட் சூட்டுடன் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalaivar 169 Nelson Rajinikanth viral change in Twitter

People looking for online information on Anirudh, Nelson, Thalaivar169 will find this news story useful.