Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

அஜித்தின் 'பில்லா ரீ ரிலீஸ்'.. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு நடுவே 'தெறிக்கவிட்ட' சம்பவம்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியான தருணத்தில் தமிழகத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து திரையரங்குகள் விடுதலை பெற்றன.

Ajith Billa Glimpse during Nenjam Marappathillai show Video

100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலில் மாஸ்டர் படமும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் வெளியாகின. முடங்கிக் கிடந்த ரசிகர்களும் வெளியில் வரத் தொடங்கின. இதனிடையே வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் அறிவிப்பாக தல அஜித் ஏற்கனவே டான் வேடம் உட்பட இரட்டை வேடத்தில் நடித்து 2009ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ரீமேக் திரைப்படமான பில்லா படம் மீண்டும் மார்ச் 12-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரசிகர்கள் பில்லா படத்துக்கு அங்கங்கே கட்-அவுட் வைத்து வருகின்றனர்.

இதனிடையே செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் இடைவேளையில் பில்லா படத்தின் விளம்பரம் திரையில் ஒளிர்ந்த வீடியோவை ரசிகர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில்  ‘தெறிக்க விடலாமா?’ என்று விளம்பரத்தின் இறுதியில் கேட்ப்படுகிறது. இதைக் கேட்டதும் ரசிகர்கள் போடும் சத்தம் திரை அரங்கத்தை ஆர்ப்பரிக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படம் இருவருக்குமே முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்தது.

ALSO READ: சிம்புவின் இந்த படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது! .. அஜித்தின் 'பில்லா' ரீ-ரிலீஸை அடுத்து.. வெளியான தகவல்!

மேலும் செய்திகள்

Ajith Billa Glimpse during Nenjam Marappathillai show Video

People looking for online information on Ajith Kumar, Billa, Nenjam Marappathillai, Nenjam Marappathillai Tamil, ReRelease, Selvaraghavan, ThalaAjith, Yuvan Shankar Raja will find this news story useful.