Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"என் உழைப்புக்கு இது".... Behindwoods டிஜிட்டல் விருது பற்றி நெகிழ்ச்சியான பதிவிட்ட பாபா பாஸ்கர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம்.

Baba baskar master about behindwoods award நெகிழ்ச்சியான பதிவிட்ட பாபா பாஸ்கர்

அதேபோல் இந்த நிகழ்ச்சிக்குப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பல பிரபலங்களும் பங்கெடுத்திருந்தனர். புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு "MOST PROMISING COMEDIAN ON TELEVISION - MALE FOR COOKU WITH COMALI" என்ற விருது வழங்கப்பட்டது. அதுவும் தனது மகன் என்று அவர் அன்பாக அழைக்கும் பாலா கையால் விருது வழங்கப்பட்டது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த விருது அவருக்கு கிடைக்க முக்கிய காரணமே அவரது உழைப்பும் எதையும் பாஸிட்டிவ் மனதுடன்  எதிர் நோக்கும் தன்மையும் தான். இன்று பாஸ்கர் மாஸ்டர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். முக்கியமாக இளைஞர்களுக்கு அவரது எனர்ஜி மிகவும் பிடித்திருக்கிறது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் கடுமையான போட்டியாளர்களையும் போட்டியிட்டு ஜெயிக்கவேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சிகளுக்கே பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "உழைப்புக்கு மக்களால் கொடுக்கப்பட்ட மாபெரும் மரியாதை. வேற லெவல் சந்தோஷம். ரொம்ப நன்றி செல்லங்களா" என்று கூறியுள்ளார்.

"என் உழைப்புக்கு இது".... BEHINDWOODS டிஜிட்டல் விருது பற்றி நெகிழ்ச்சியான பதிவிட்ட பாபா பாஸ்கர்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Baba baskar master about behindwoods award நெகிழ்ச்சியான பதிவிட்ட பாபா பாஸ்கர்

People looking for online information on Baba Baskar will find this news story useful.