Breaking: ஜோதிகா - கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா மற்றும் கார்த்தி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் தலைப்பு குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Jyothika and Karthi film titled as Thambi releasing on Dec 20

‘பாபநாசம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘தம்பி’ என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.