இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானுடன் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 19, 2019 08:48 AM
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் விக்ரம் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'விக்ரம் 58' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
![Shooting Update of Vikram and Irfan Pathan's Vikram 58 Shooting Update of Vikram and Irfan Pathan's Vikram 58](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/shooting-update-of-vikram-and-irfan-pathans-vikram-58-photos-pictures-stills.jpg)
இந்த படத்தை 7 ஸ்கரீன் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. என்ஜிகே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவக்குமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
Tags : Vikram, AR Rahman, Ajay Gnanamuthu, Irfan Pathan