மோகன்லாலின் சூப்பர்ஹிட் ‘திரிஷ்யம் 2’ இந்தி ரீமேக்… அஜய் தேவ்கன் வெளியிட்ட ரிலீஸ் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜய் தேவ்கன் மலையாள திரைப்படமான திரிஷ்யம் 2 ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.

Ajay devgan announced drishyam 2 release date

Also Read | சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி…. சிங்கிள் ட்வீட்டில் Full stop வைத்த வெங்கட் பிரபு

திரிஷ்யம் வெற்றியும் ரீமேக்குகளும்…

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் காம்போ, ரசிகர்களால் மறக்க முடியாத மிரட்டலான காம்போ என்று சொல்லலாம். காரணம் இவர்கள் இருவரும் தங்கள் த்ரில்லர் படங்கள் மூலம் தங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். குறிப்பாக இந்த கூட்டணியின் உருவாக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மொழி தாண்டியும் பல மொழி ரசிகர்களால் பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் திரில்லர் வகையில் ஒரு ‘cult’ திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

திரிஷ்யம் ரீமேக்

திரிஷ்யம் முதல்பாகம் மலையாளத்தில் ஹிட்டான பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றது.  தமிழில் கமல்ஹாசன், இந்தியில் வெங்கடேஷ் என அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் இந்த ரீமேக் படங்களில் நடித்தனர். இந்தியில் மோகன்லால் வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். முக்கியக் கதாபாத்திரங்களில் தபு மற்றும் ஸ்ரேயா ஆகியோர் நடித்தனர்.

Ajay devgan announced drishyam 2 release date

திரிஷ்யம் 2….

இதையடுத்து கடந்த ஆண்டு மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான ’திரிஷ்யம் 2’  திரைப்படத்தை உருவாக்கினர். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஹிட்டானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.

Ajay devgan announced drishyam 2 release date

ரிலீஸ்…

இந்நிலையில் தற்போது திரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை கதாநாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கன் அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 18 ஆம் தேதி 2022 அன்று திரிஷ்யம் 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் அதிகளவில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகின்றன. அஜய் தேவ்கன் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக்கிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “ஆசியாவிலேயே திறமையான இயக்குனர்…” நெல்சன் பிறந்தநாளில் விக்னேஷ் சிவனின் அன்பு வாழ்த்து

தொடர்புடைய இணைப்புகள்

Ajay devgan announced drishyam 2 release date

People looking for online information on Ajay devgan, Drishyam 2 Movie, Drishyam 2 release updates will find this news story useful.