கார்த்தியின் கைதி ரீமேக் - 'நான் தான் ஹிந்தியில் நடிக்கிறேன்' - பிரபல பாலிவுட் ஹீரோ கருத்து.
முகப்பு > சினிமா செய்திகள்கார்த்தி நடித்த கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் நடிப்பதாக பிரபல பாலிவுட் ஹீரோ தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். நரேன், அர்ஜுன் தாஸ், தீனா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து கைதி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரீமேக்கில் ஹீரோவாக நடிக்க போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட வந்த நிலையில், இப்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கன் இத்திரைப்படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த இவரது ட்விட்டர் பதிவில், ''ஆமாம், நான் தான் கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறேன், படம் பிப்ரவரி 12, 2021 வெளியாகும்'' என அவர் தெரிவித்துள்ளார். படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இதற்கு முன் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Yes, I’m doing the Hindi remake of the Tamil film Kaithi. Releases on February 12, 2021 🙏 @RelianceEnt @DreamWarriorpic @ADFFilms @Shibasishsarkar #SRPrakashbabu @prabhu_sr @Meena_Iyer
— Ajay Devgn (@ajaydevgn) February 28, 2020