காபி வித் கரண்-ஆடி காரை வென்ற ‘சிங்கம்’ ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செலிப்ரிட்டி டாக் ஷோ ஒன்றை நடத்தி வருகிறார்.

Ajay Devgan has won the Answer of the Season award in Koffee with Karan Season 6.

‘காபி வித் கரண்’ என்ற அந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 6வது சீசனை நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். இந்த சீசனின் வெற்றியாளருக்கு விலையுயர்ந்த ஆடி கார் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்த சீசனில் சிறப்பாக விளையாடி ரூ.54 லட்சம் மதிபுள்ள ஸ்போர்ட் பேக் ஆடி காரை பரிசாக தட்டிச் சென்றுள்ளார். மேலும், ரன்வீர் சிங், விக்கி கவுஷால், தில்ஜீத், கஜோல், பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், கரீனா கபூர் உள்ளிட்டோருக்கு சில பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக தென்னிந்திய பிரபலங்களான ‘பாகுபலி’ குடும்பத்தை சேர்ந்த ராஜமவுலி, பிரபாஸ், ராணா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.