www.garudabazaar.com

"இந்த வருசத்துல இதுதான் படிக்கிற முதல் புக்".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

Aishwarya Rajinikanth post about the secret book

Also Read | "அஜித் சார் நீங்கள் தான் BEST".. 'துணிவு' படத்தின் வில்லன் வைரல் ட்வீட்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth post about the secret book

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பின்னர் அதே நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இசையமைப்பாளர் ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறை வழிபாடு செய்தனர்.

அதேபோல் சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஐஸ்வர்யா ராய் சாமி தரிசனம் செய்தார். 

Aishwarya Rajinikanth post about the secret book

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " சிறுவயது முதலே வாசிப்பு என்பது என் வாழ்வின் ஒரு அங்கம்.. தற்போது வாசிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை.. இந்த வருடத்தின் முதல் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த The Secret நூலின் மறுவாசிப்பு!" என பதிவிட்டுள்ளார்.

Also Read | வைரலாகும் பிரியா அட்லியின் Pregnancy போட்டோ ஷூட்.. சமந்தா போட்ட வைரல் கமெண்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth post about the secret book

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth post, Secret book will find this news story useful.