கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமான இவர் பின்பு விஜய்சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

ஐஸ்வர்யா தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். காக்கா முட்டை மற்றும் கனா திரைப்படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நல்ல நடிப்பு மற்றும் நடனம் ஆகிய திறமைகளால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாகியாக ஐஸ்வர்யா உயர்ந்துள்ளார்.
எப்போதும் தனது குடும்பத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருக்கு இன்று பிறந்த நாள். இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா” என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
happie happie bday to my bro @Manikan97622480 .... 😍😍 pic.twitter.com/vhn0T5roWL
— aishwarya rajessh (@aishu_dil) March 29, 2020