விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் படத்தில் இருந்து வெளியான முக்கிய அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 17, 2019 10:52 AM
'மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நவீன் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 43 நாட்களாக வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
Tags : Agni Siragugal