அஜித் - வித்யா பாலன் 'அகலாதே ' சாங் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின்  'அகலாதே ' பாடல் நாளை  மாலை  6.00 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்

Agalaathey Song From AjithKumar nerkondapaarvai releases tomorrow

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார். அஜித்தின் 59 ஆவது படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 8 வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் 'அகலாதே ' பாடல் நாளை  மாலை  6.00 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.