Breaking: பிரபல இயக்குநருடன் இணையும் ரியோ ராஜ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 07:56 PM
பிரபல விஜேவாகவும் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியின் மூலமும் ரசிகர்களால் பரவலாக அறியப்படுபவர் ரியோ ராஜ். இவர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்க, சபீர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். யு.கே.செந்தில்குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து ரியோ ராஜ் நடிக்கும் படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தை பானா காத்தாடி, செம போத ஆகாத படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேசன் இந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.
'பானா காத்தாடி' மற்றும் 'செம போத ஆகாத' படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. எனவே இந்த படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ராஜேஷ் என்பவர் தயாரிக்கவிருக்கிறாராம். இந்த படத்துக்கு ராஜ கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவிருக்கிறது.