Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளி 2-ஐ அடுத்து.. பிரபல நிகழ்ச்சியின் அடுத்த சீசன்!.. தொகுப்பாளினி அர்ச்சனா! Viral Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

after CWC 2 popular programs next season Vijay Tv Archana Promo

எப்போதும் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து தான் அன்றாடம் ட்ரெண்டிங் விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே அண்மையில் நடந்தது.

after CWC 2 popular programs next season Vijay Tv Archana Promo

இதில் கனி டைட்டில் கார்டு வென்றார். சிம்பு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது என்று ரசிகர்கள் இப்போதே ஏங்கத் தொடங்கி விட்டனர். இதற்கு முன்னதாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்றன.

after CWC 2 popular programs next season Vijay Tv Archana Promo

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பல பிரபலங்கள் தமிழக மக்களிடையே பிரபலமாகியுள்ளனர். குறிப்பாக நான்காவது சீசனில் வென்ற ஆரி, தமிழக மக்களின் நெஞ்சத்தில் குடியமர்ந்தார். இதேபோல் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மூலம் புகழ், சிவாங்கி, அஷ்வின் உள்ளிட்டோர் மக்களிடையே பிரபலமாக உள்ளனர்.

after CWC 2 popular programs next season Vijay Tv Archana Promo

இந்த நிலையில் விஜய் டிவியின் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த போட்டியாளரும், தொகுப்பாளினியுமான விஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை மா.கா.பாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.

Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ALSO READ: MS பாஸ்கர் பொண்ணு நல்லா வளந்துட்டாங்களே!.. வீட்ல நடக்குற விசேஷம் தெரியுமா?.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

after CWC 2 popular programs next season Vijay Tv Archana Promo

People looking for online information on அர்ச்சனா, Biggboss, CookWithComali2, Mr Mrs Chinnathirai, MrMrsChinnathirai, Trending, VijayTelevision will find this news story useful.