Video: MS பாஸ்கர் பொண்ணு நல்லா வளந்துட்டாங்களே!.. வீட்ல நடக்குற விசேஷம் தெரியுமா?.. வைரல் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்குரல் கலைஞராகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், 8 தோட்டாக்கள் படத்தில் வில்லனாகவும் கூட கவனம் ஈர்த்த தமிழ் சினிமாவின் அரிய மற்றும் தவிர்க்க முடியாத கலைஞர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் நிச்சயதார்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது. ஐஸ்வர்யா பாஸ்கர் ஒரு குரல் கலைஞர். அண்மையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தனாவுக்கு கூட ஐஸ்வர்யா பாஸ்கர் தான் டப்பிங் குரல் கொடுத்திருந்தார்.
அத்துடன் ஐஸ்வர்யாவுக்கு அவரது தந்தை எம்.எஸ்.பாஸ்கர் ஒரு புல்லட் பைக்கை பரிசளித்திருந்த வீடியோ நெகிழவைக்க கூடியதாய் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதேபோல் ஐஸ்வர்யா பாஸ்கரின் நிச்சயதார்த்த வீடியோவில் எம்.எஸ்.பாஸ்கர் டான்ஸ் ஆடிய சந்தோஷமான தருணங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தான் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவின் நலுங்கு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது இந்த வீடியோக்களும் தகவல்களும் ரசிகர்களை சென்றடைந்துள்ளன.
அத்துடன் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும் ஐஸ்வர்யாவின் சகோதரருமான ஆதித்யா பாஸ்கரும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக நடித்து நம்மையெல்லாம் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
VIDEO: MS பாஸ்கர் பொண்ணு நல்லா வளந்துட்டாங்களே!.. வீட்ல நடக்குற விசேஷம் தெரியுமா?.. வைரல் வீடியோ! வீடியோ