www.garudabazaar.com
iTechUS

"எல்லார்கூடயும் Friendship வெச்சுப்பேன், ஆனா அந்த ஒருத்தரு கூட மட்டும்".. ADK கைகாட்டிய ஹவுஸ்மேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வீட்டிற்குள் பல சண்டை, சச்சரவுகள், எமோஷனலான தருணங்கள் என நிறைய பார்த்து விட்டது.

ADK about his relation with particular housemate

இவை அனைத்தையும் கடந்து 21 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் தற்போது ஷிவின், விக்ரமன், அசிம், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகிய 5 பேர் Finale ரவுண்டில் முன்னேறி உள்ளனர்.

முன்னதாக, பிக் பாஸ் Finale சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி இருந்தார் ADK. சிறந்த போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த ஏடிகேவின் பாடல்களுக்கு பிரத்யேக ரசிகர்களே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சூழ்நிலைகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் ஸ்பாட்டில் நிறைய பாடல்களை அவர் பாடி உள்ளார்.

அதே போல, சிறப்பாகவும் ஆடி வந்த ஏடிகே, Finale வாரத்திற்கு முன் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ADK, Behindwoods நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் தனது பிக் பாஸ் அனுபவம் குறித்தும், விக்ரமன், அசிம் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை ADK பகிர்ந்து கொண்டார். அதே போல கமல்ஹாசன் அளித்த தொப்பி குறித்தும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை பேசி இருந்தார்.

ADK about his relation with particular housemate

அப்போது பிக் பாஸ் வீட்டில் தனக்கு பிடிக்காத நபர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஏடிகே, "பிடிக்காத ஆளுன்னு சொல்ல முடியாது, செட் ஆகலன்னு சொல்லலாம். தனலட்சுமி மேல எனக்கு வருத்தம் இருக்கு. நான் வந்து மரியாதை வேணும்ன்னு எதிர்பார்க்க மாட்டேன். ஆனா, அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்ன்றது உங்களோட கடமை. நான் வந்து அவங்களோட (தனலட்சுமி) கிட்டத்தட்ட 20 வயசு மூத்த ஆள்.

ஒரு டாஸ்க்ல வந்து வா, போன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அந்த இடத்தில் வந்து நம்ம பெண்களை மதிக்கணும்.  அதனாலதான் நாங்க சமமா விளையாடுறோம். அப்ப நான் சட்டைய புடிச்சு இழுக்கும்போது தெரியாம இழுத்ததுல ஆயிஷா சட்டை கிழிஞ்சுருச்சு. அப்போ வந்து ரொம்ப இதுவா பேசுனாங்க. மறுபடியும் ரெண்டு, மூணு நாள் கழிச்சு நான் அவங்க கிட்ட பேசும் போது, 'வா போன்னு பேசுனதுல உங்களுக்கு மனவருத்தம் இல்லையான்னு கேட்டேன். நான் செஞ்சது தப்பு இல்ல நான் யாருக்கும் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லைன்னு சொன்னாங்க. நான் மன்னிப்பு கேட்க சொல்லல, தப்ப உணர்றீங்களான்னு கேட்டேன். அதுவும் இல்லன்னு தனா சொன்னாங்க.

ADK about his relation with particular housemate

அதோட நான் அவங்களோட பேசுறத நிப்பாட்டிட்டேன். இப்ப திருப்பி அவங்க வீட்டுக்கு வரும்போது கூட நல்லா தான் பேசினாங்க. வெளிய வந்த உடனே அவங்க கூட ஃபிரண்ட்ஷிப் வெச்சுப்பீங்களான்னு கேட்டீங்கன்னா எனக்கு உறுதியா தெரியல. மத்தவங்க எல்லார்கூடயும் ஃபிரண்ட்ஷிப் வெச்சுப்பேன். ஆனா தனலட்சுமி கூட டிஸ்டன்ஸ் வச்சுக்கணும்ன்னு நினைக்கிறேன்" என ADK கூறி இருந்தார்.

"எல்லார்கூடயும் FRIENDSHIP வெச்சுப்பேன், ஆனா அந்த ஒருத்தரு கூட மட்டும்".. ADK கைகாட்டிய ஹவுஸ்மேட்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ADK about his relation with particular housemate

People looking for online information on ADK, Bigg boss 6 tamil, Dhanalakshmi will find this news story useful.