www.garudabazaar.com

"தமது பட இயக்குநருடன்" இரண்டாவது முறையாக இணையும் அதர்வா?.. படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அதர்வா முரளி இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். மேலும் தமக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளவர்.

is this Atharvaa join hand with Sargunam next movie title

பாணா காத்தாடி திரைப்படத்தில் தொடங்கியது அதர்வா முரளியின் திரைப்பயணம். தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், ஈட்டி, கணிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் நயன்தாராவுடன் இணைந்து இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்தார். இதேபோல் இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்திலும், சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன் திரைப்படத்திலும் அதர்வா நடித்திருந்தார்.

is this Atharvaa join hand with Sargunam next movie title

இந்த நிலையில்தான் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி, அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கும் அடுத்த படத்துக்கு  “பட்டத்து அரசன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இந்த தகவலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கலாம்.

is this Atharvaa join hand with Sargunam next movie title

இதனிடையே நடிகர் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்த வரிசையில் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இதேபோல் அதர்வா,  ‘அட்ரஸ்’ என்னும் திரைப்படத்தில் முக்கிய ‘கேமியோ’  ரோலில் நடிப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: "சீரியல் நடிகையுடன் engagement-ஆ?".. பாக்கியலட்சுமி நடிகர் பகிர்ந்த Photo.. அந்த இன்னொரு கை யாரோடது?

தொடர்புடைய இணைப்புகள்

is this Atharvaa join hand with Sargunam next movie title

People looking for online information on Atharva, Atharvaa, Atharvaa Murali, Sargunam will find this news story useful.