www.garudabazaar.com

"சீரியல் நடிகையுடன் engagement-ஆ?".. பாக்கியலட்சுமி நடிகர் பகிர்ந்த Photo.. அந்த இன்னொரு கை யாரோடது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆர்யன்.

did Baakiyalakshmi aryan engaged to this serial actress ecretly

அண்மையில் நடிகர் ஆர்யன் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்றில் இரண்டு கைகள் மிகவும் ரொமான்டிக்காக கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் விரல்களில், அதாவது இரு கைகளின் விரல்களில் தலா ஒரு அழகான மோதிரம் தென்படுகிறது.

did Baakiyalakshmi aryan engaged to this serial actress ecretly

இதைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் இது நிச்சயமாக நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று உறுதிபடக் கூறுகின்றனர். குறிப்பாக ஆர்யன், பிரபல சீரியல் நடிகையான ஷபானாவுடன் தான் நிச்சயதார்த்தம் செய்திருக்க வேண்டும் என்று கருதி ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

did Baakiyalakshmi aryan engaged to this serial actress ecretly

ஜீ தமிழில் செம்பருத்தி தொடரில் நடித்து வருபவர் ஷபானா. செம்பருத்தி தொடரில் செம்பருத்தி எனும் கேரக்டரில் நடித்து வரும் ஷபானாவும், பாக்கியலட்சுமி நடிகர் ஆர்யனும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஒருவரை ஒருவர் டேக் செய்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இதே போல் ஒருவருக்கு ஒருவர் அன்பு பரிசுகளை அனுப்பியும், அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாக உள்ளன.

ஆர்யனை பொறுத்தவரை ஷபானாவை, ஷாபூத்ரி என்று குறிப்பிடுவது தான் வழக்கம். இந்நிலையில் ஆர்யன் வெளியிட்டுள்ள ஃபோட்டோவில்  இருக்கும் அந்த இன்னொரு கை யாரென அவர் குறிப்பிடவில்லை. இதேபோல் இது உண்மையில் நிச்சயதார்த்த மோதிரம் தானா என்பதற்கும் இப்போதைக்கு பதில் இல்லை. விரைவில் இதற்கான பதில் கிடைக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

did Baakiyalakshmi aryan engaged to this serial actress ecretly

இதனிடையே இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆர்யன், “அவள் ஆன்மாவுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் கெமிஸ்ட்ரி குறையும். மேலும் ஒரு நாள் வெளிப்புற அழகும் மங்கிவிடும். ஆனால் ஆன்மாவுக்கு என்றுமே வயது ஆகாது. அது தான் அன்பு வாழும் இடம்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யனின் இந்த பதிவுக்கு செம்பருத்தி ஷபானாவின் நெருங்கிய தோழிகளும் நடிகைகளுமான ரேஷ்மா, ஜனனி அஷோக் குமார் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Also Read: சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு பிரபல நடிகருடன் விரைவில் டும்டும்டும்!!..  ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன பதில்!

"சீரியல் நடிகையுடன் ENGAGEMENT-ஆ?".. பாக்கியலட்சுமி நடிகர் பகிர்ந்த PHOTO.. அந்த இன்னொரு கை யாரோடது? வீடியோ

did Baakiyalakshmi aryan engaged to this serial actress ecretly

People looking for online information on Aryan, Shabana Shahjahan will find this news story useful.