www.garudabazaar.com

சிக்கன் பிரியாணி & புரோட்டா.. எந்திரன் வசனத்துடன் அதிதி ஷங்கர் பகிர்ந்த செம வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ஷங்கர் சிக்கன் பிரியாணி & புரோட்டா குறித்த பகிர்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aditi Shankar Instagram Story about Chicken Biryani Oil Parotta

Also Read | "ரொம்ப மகிழ்ச்சியான இரண்டு ரோல்".. இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி சொன்ன விக்ரம்!

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர்.  விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Aditi Shankar Instagram Story about Chicken Biryani Oil Parotta

சமீபத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

மேலும் பிரபல ஜவுளி நிறுவனத்தின் தீபாவளி விளம்பர படத்தில் கூட நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அதிதி ஷங்கருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் அந்த விளம்பரத்தில் தோன்றி இருந்தார்.

Aditi Shankar Instagram Story about Chicken Biryani Oil Parotta

அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Aditi Shankar Instagram Story about Chicken Biryani Oil Parotta

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை அதிதி ஷங்கர் ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். சிக்கன் பிரியாணி & புரோட்டா குறித்த அந்த வீடியோவில் எந்திரன் படத்தின் புகழ் பெற்ற வசனமான "மனிதன் படைச்சதுலயே ஒருப்படியான இரண்டே விஷயம்.. ஒன்னு நான்.. இன்னொன்னு நீ" என சிக்கன் பிரியாணி & புரோட்டா ஆகியவற்றை குறிப்பிடுவது போல அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து "செத்திட்டேன்ன்ன்" என அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | சிங்கங்களுக்கு மத்தியில் மனைவியுடன் ராம்சரண்.. வைரலாகும் டூர் போட்டோஸ் & வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar Instagram Story about Chicken Biryani Oil Parotta

People looking for online information on Aditi Shankar, Chicken Biryani, Oil Parotta will find this news story useful.