விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணையும் படம் குறித்து முக்கிய அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 11:13 AM
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் ரௌடி பிக்சர்ஸ் என்ற தனது பட நிறுவனம் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிலிந்த் ராவ் ஏற்கனவே சித்தார்த்த் நடித்த அவள் படத்தை இயக்கியிருந்தார். விக்னேஷ் சிவனின் நானும் ரௌடி தான் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags : Vignesh shivan, Nayanthara, Rowdy Pictures