"முட்டாள்கள்...இவங்களுக்கு கொரோனா வரணும்" - நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கொந்தளிப்பு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வீடியோ பதிவிட்டு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கொந்தளிப்பு Actress Varalakshmi Sarathkumar Posts An Shocking Video On Corona lockdown

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வீடியோ இன்றை பதிவிட்டுள்ளார். அதில் காவலர் ஒருவரை போட்டு பொது ஜனங்கள் மிக மோசமாக தாக்குகின்றனர். பதபதைக்கும் இந்த வீடியோவிற்கு மேல அவர் "அறிவில்லாத செயல். காவல்துறை நமக்காக உயிரை பணயம் வைத்து உழைப்பதற்கு நீங்கள் கொடுக்கும் வெகுமதி இதுதானா? இவர்கள் எல்லாம் வைரஸ்  வருவதற்கு தகுதியானவர்கள் தான். கொடூரம்...அந்த காவலரிடம் இந்த முட்டாள்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor