மீண்டும் தமிழில் ஹீரோவாகிறாரா பிருத்விராஜ் ? - அவரது பதில் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் பிருத்வி ராஜ்  அதன் பிறகு பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து மொழி, சத்தம் போடாதே , நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்து நடிக்கும் தமிழ்படம் குறித்து பிருத்விராஜ் | Actor Prithviraj speaks about his comeback tamil film

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் , ஐஸ்வர்யா ராயுடன் அவர் நடித்த ராவணன் , காவியத் தலைவன் அவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிருத்வி ராஜ் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில்  லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் நினைத்தாலே இனிக்கும் பட பாடலை பகிர்ந்து தமிழில் மீண்டும் நடியுங்கள் பிருத்வி ராஜ் என்று கேட்க, கண்டிப்பாக ஆனால் நல்ல கதை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor