www.garudabazaar.com

''முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..'' - வனிதா - பீட்டர் பாலின் ரீசன்ட் க்ளிக் செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடன் எடுத்த ரீசன்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

பீட்டர் பாலுடன் நடிகை வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் | actress vanitha vijaykumar shares her latest photo with peter paul

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் முதல் மனைவி, அவரை பற்றி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், குடிபழக்கம் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, பீட்டர் பால் குறித்து சரியாக தெரியாமல் வனிதாவே ஏமாந்து போயிருக்கிறார் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர் சிலர். 

இதை தொடர்ந்து பீட்டர் பாலை பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக அவர் முத்தம் கொடுக்கும் ரீசன்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வனிதா. மேலும், ''மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்., முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று'' என தங்கமீன்கள் பட பாடல் வரிகளையும் அவர் பதிவிட்டுள்ளார். வனிதா வெளியிட்ட இந்த புதிய பதிவு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Magalgalai petra appakkulukku thaan theriyum...mutham kaamathil sernthathu illai endru ...,💋

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பீட்டர் பாலுடன் நடிகை வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் | actress vanitha vijaykumar shares her latest photo with peter paul

People looking for online information on Biggbosstamil, Peter Paul, Vanitha, Vanitha Vijaykumar, Viral photo will find this news story useful.