www.garudabazaar.com

ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ.. ஒட்டுமொத்த ஃபேன்ஸும் க்ளோஸ்.. கிறங்கடிக்க வைத்த 'பிக்பாஸ்' ஷெரின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷெரின்.

actress sherin new reels video and photos gone viral among fans

இதனைத் தொடர்ந்து, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், பல திரைப்படங்களிலும் ஷெரின் நடித்திருந்தார்.

பிக்பாஸ் என்ட்ரி

இதன் பின்னர், நடுவில் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஷெரின், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில், போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.

ரசிகர்களின் ஃபேவரைட்

தொடர்ந்து, மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலம் ஆன ஷெரின், பலரின் ஃபேவரைட் போட்டியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் போது, சற்று குண்டாக தெரிந்த ஷெரின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு, தனது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கினார்.

actress sherin new reels video and photos gone viral among fans

போட்டோஷூட்

அது மட்டுமில்லாமல், திரைப்படம் நடிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்தது போல, மிகவும் மெலிந்து ஜொலிக்கவும் ஆரம்பித்தார் ஷெரின். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள், ஹாட் போட்டோஷூட்கள் என பதிவிட்டு, நெட்டிசன்கள் பலரையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். மேலும், சில திரைப்படங்களில் அவர் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜொலிக்கும் ஷெரின்

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷெரின் இன்று வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ மற்றும் மஞ்சள் புடவையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் இதயங்களை அள்ளி வருகிறது.

 

பிக்பாஸ் சமயத்தில், சற்று குண்டாக இருந்து, தற்போது மெலிந்து அசத்தலாக இருக்கும் ஷெரின், திரையுலகில் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரசிகர்களின் மனதினை கவரத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

actress sherin new reels video and photos gone viral among fans

People looking for online information on Bigg Boss 3, Instagram, Reels Video, Sherin, Viral Photoshoot will find this news story useful.