முத்தம் கொடுத்த திவ்யபாரதி! சொக்கிப்போன ரசிகர்கள்... படு வைரல் ஆகும் நைட் பார்ட்டி வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: நடிகை திவ்ய பாரதியின் நைட் பார்ட்டி வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor.
இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி. நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராமில் தினமும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.
நடிகை திவ்யபாரதி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருநதார். இந்த புகைப்படங்கள் பேச்சுலர் படத்தில் கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்றும், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான பாத்திரம் என்றும் கூறி இருந்தார்.
ஏற்கனவே திவ்யபாரதி தனது சிக்ஸ் பேக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ ஷூட் நடத்திய அந்த வீடியோ ஏற்கனவே இதே போல் வைரலானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரபிக்குத்து பாட்டுக்கு ஆடிய நடனம் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் பங்கேற்ற வீடியோக்களை பகிர்ந்துள்ளார். வீடியோவில் கேம்ராவுக்கு முத்தமும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.
முத்தம் கொடுத்த திவ்யபாரதி! சொக்கிப்போன ரசிகர்கள்... படு வைரல் ஆகும் நைட் பார்ட்டி வீடியோ வீடியோ