www.garudabazaar.com

என்ன திடீர்னு இவ்ளோ சீரியஸா ஒரு பதிவு…. ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த ராஷ்மிகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா இன்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Actress rashmika mandaanna latest viral statement on Instagram

National crush ராஷ்மிகா

கன்னட திரைப்பட நடிகையாக திரைத்துறைக்குள் அறிமுகமான ராஷ்மிகா, பின்னர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம அறிமுகமானார். இதனை அடுத்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான 'டாப் டக்கர்' ஆல்பம் பாடலில் நடித்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார்.

இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ள நிலையில், ரசிகர்கள் அவரை நேஷனல் க்ரஷ் என பட்டமளித்து மகிழ்ந்து வருகின்றனர். அதற்கேற்றார்போல ராஷ்மிகாவும் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுதல் மற்றும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்தல் என இருந்துவருகிறார்.

Actress rashmika mandaanna latest viral statement on Instagram

கலகலப்புக்குப் பஞ்சம் இல்லாத ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா எப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தை வைத்திருக்கிறார். புகைப்படங்கள் பதிவிட்டாலும், அல்லது வீடியோ போட்டாலும் அது கலகலப்பான ஒன்றாகவோ அல்லது நகைச்சுவையான ஒன்றாகவோதான் எப்போதும் இருக்கும். ஆனால் இன்று திடீரென்று ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியான சீரியஸ் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கும் விஷயம் பலரையும் கவர்ந்துள்ளது.

Actress rashmika mandaanna latest viral statement on Instagram

அப்படி என்ன பதிவு

உங்கள் எல்லோருடனும் இருக்கும் உலகம் ஸ்பெஷலானது. நீங்கள் என்றால் உங்கள் அனைவரையும்தான் சொல்கிறேன். உங்கள் அனைவராலும்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு   முக்கியமானவர்கள். உங்களில் யாராவது இன்றைய நாளை மிக மோசமானதாக உணர்ந்தீர்களானால்  அதை நான் உணர்வேன். அதுபோலவே நான் உங்களுக்கான என் அன்பை உங்களுக்கான அனுப்புகிறேன் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஒரு சிறு அடி முன்னெடுத்து வைத்தால் நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள். அதனால் உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் ‘இதுவும் கடந்துபோகும்’ என்று.‘ என மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவா இவ்வளவு சீரியஸாகவும் எமோஷனலாகவும் பதிவு செய்துள்ளது என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress rashmika mandaanna latest viral statement on Instagram

People looking for online information on Pushpa, Rashmika, Rga will find this news story useful.