www.garudabazaar.com

சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த ரசிகை.. நடிகை சமந்தாவின் லவ்லி கமெண்ட்.. வைரல் போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தனது ரசிகை ஒருவர் வரைந்த ஓவியத்தை வியந்து பாராட்டியிருக்கிறார். அவருடைய பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress Samantha Praises the Fan who drew her Hands

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “அம்மா கேரக்டரே சினிமால இருக்க மாட்டேங்குது” - மனம் திறக்கும் சத்யப்ரியா.!. பேட்டி

சமந்தா 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Actress Samantha Praises the Fan who drew her Hands

Images are subject to © copyright to their respective owners.

சாகுந்தலம்

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சாகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சாகுந்தலம் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Actress Samantha Praises the Fan who drew her Hands

Images are subject to © copyright to their respective owners.

பரிசு

சமீபத்தில் நடிகை சமந்தா ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த தனது கைகளின் புகைப்படங்களை பதிவிட்டு,"இது ஆக்சன் காட்சிகளுக்கான வெகுமதி" என பதிவிட்டிருந்தார். சண்டைக் காட்சி படப்பிடிப்பில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எந்த படத்தின் படப்பிடிப்பு என சமந்தா அறிவிக்கவில்லை. இந்நிலையில் சமந்தாவின் ரசிகையான ஸ்ருதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தாவின் காயமடைந்த கைகளை ஓவியமாக வரைந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அவர் எழுதியுள்ள பதிவில்," நான் உங்கள் வெற்றியின் ரசிகை மட்டுமல்ல, உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கருணை ஆகியவற்றின் மிகப்பெரிய ரசிகை. 25 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்ததற்காக இதை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். உடல்நிலை சரியில்லாததால் சரியான நேரத்தில் இதனை பதிவிட முடியாமல் போய்விட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என நம்புகிறேன். லவ் யூ" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து அதில்,"தேங்க் யூ லவ்" என சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | Pandian Stores : விலகிய சாய் காயத்ரி.. மீனா வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யாவாக மீண்டும் வந்த VJ தீபிகா.!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha Praises the Fan who drew her Hands

People looking for online information on Samantha, Samantha Fans will find this news story useful.