www.garudabazaar.com

பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சென்ற சமந்தா.. இது தான் காரணமா? அவரே வெளியிட்ட வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Samantha Ruth Prabhu Visit Sree Peddamma Thalli

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கோலார் தங்க சுரங்கத்தில் பா. ரஞ்சித்.. மாளவிகா பகிர்ந்த 'தங்கலான்' படத்தின் BTS புகைப்படங்கள்!

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Samantha Ruth Prabhu Visit Sree Peddamma Thalli

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Ruth Prabhu Visit Sree Peddamma Thalli

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Samantha Ruth Prabhu Visit Sree Peddamma Thalli

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் துவங்க உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சாந்த லெட்சுமி கோயிலான பெத்தம்மா கோயிலுக்கு படக்குழுவினர் உடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து வீடியோ ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார்.

அம்மனுக்கு புடவை, மலர் மாலை மற்றும் வளையல்கள் சாற்றி சமந்தா & படக்குழுவினர் வழிபாடு செய்துள்ளனர். 

Also Read | "நீங்க Overrated இயக்குனர்".. என ட்வீட் செய்த ரசிகர்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதிலடி!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Visit Sree Peddamma Thalli

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Shaakuntalam, Shaakuntalam Movie, Sree Peddamma Thalli will find this news story useful.