Valimai BWE
www.garudabazaar.com

KPY: "உண்மைய சொல்ட்டுமா? பொய் சொல்ட்டுமா?".. ‘Kingsley’ வாய்ஸ், பாடி லாங்வேஜ்.. தட்டி தூக்கிய அசார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 24, பிப்ரவரி, 2022: எப்போதும் புதிய புதிய பல வாய்ஸ்களை மிமிக்ரியில் முயற்சி செய்து பார்ப்பவர் நடிகர் அசார். சினிமா மற்றும் சின்னத்திரை நடிகராக திகழும் நடிகர் அசார், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் ஒரு ஸ்டார் பெர்ஃபார்மராக எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவராக வலம் வருவார்.

vijay tv azhar imitates actor redin kingsley trending KPY

நடிகர் அசார்

இந்த நிலையில், தான் அசார் மற்றும் ஒரு புதிய வாய்ஸை எடுத்து பேசி அசத்தியுள்ளார். மிமிக்ரியில் மட்டுமல்லாது காமெடியிலும் கவனம் செலுத்தும் அசார் இந்த முறை நடிகர் கிங்ஸ்லி போலவே பேசி விஜய் டிவியில் அசத்தியுள்ளார். ஆம், நடிகர் கிங்க்ஸ்லி ஒரு நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடித்து வந்தாலும், நடிகர் சந்தானம் நடித்த ஏ-1 திரைப்படத்தில் பேசும் ஒரு வசனத்தின் மூலம் படுவைரலானார்.

பாபநாசம் படத்துக்கு விட்டுட்டு போயிட்டீங்களே?

அந்த படத்தின் ஒரு காட்சியில் யார் எப்படி வந்து கேட்டாலும் பாபநாசம் படத்தில் வருவது போல் அனைவரும் ஒரே மாதிரி பேச வெண்டும் என நடிகர் சந்தானம், தன் நண்பர்களிடம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார். அதன் பின்னர், இந்த ப்ளானை கேட்டு சந்தானத்தின் நண்பராக வரும் கிங்க்ஸ்லி, ‘நீங்க தான் என்னை பாபநாசம் படத்துக்கு கூட்டிட்டு போகாம, விட்டுட்டு போயிட்டீங்களே?’ என்று பேசும் வசனம் குபீர் என்று சிரித்து செரிக்க வைத்துவிடும்.

தளபதி 65 - பீஸ்ட்

இதனைத் தொடர்ந்து டாக்டர் படத்தில் கிங்க்ஸ்லி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதற்கு படம் முழுவதும் ஸ்கோப் கிடைத்தது.  அதன் பின்னர் தளபதி 65 திரைப்படத்தின்  நூறாவது நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் பகிர்ந்திருந்தார்.

இதில் நடிகர் கிங்க்ஸ்லி இடம்பெற்றிருந்தார். இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி சக்கைபோடு போட்டது குறிப்பாக கிங்க்ஸ்லி மிகவும் சிரித்தபடி கீபோர்டு வாசிக்கும் பெண்ணை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய எக்ஸ்பிரஷன் மட்டும் தனியாக தெரிந்தது.

கிங்க்ஸ்லியின் எக்ஸ்பிரஷன்கள், பாடி லாங்வேஜ்

பலருக்கும் கிங்க்ஸ்லியின் எக்ஸ்பிரஷன்கள், பாடி லாங்வேஜ் மற்றும் பேசும் ஸ்லாங் உள்ளிட்டவை மிகவும் கவர்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. நகைச்சுவை நடிகராக ஒருவர் இப்படியான வித்தியாசமான பாடி லாங்குவேஜூடன், அதே சமயம் சீரியஸாக முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசி மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் என்பதற்கு கிங்க்ஸ்லி உதாரணமாகத் திகழ்கிறார் என்று ரசிகர்கள் பலரும் அவர் குறித்து கருத்து கூறுகின்றனர்.

அசத்திய அசார்

இந்த நிலையில் தான் விஜய் டிவியில் இரண்டிரண்டு செலிபிரிட்டிகளாக கலந்துகொண்டு பெர்ஃபார்ம் பண்ணும் புதிய கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் டபுள் நிகழ்ச்சியில் டி.எஸ்.கே சரவணகுமாருடன் இணைந்து நடிகர் அசார், கிங்க்ஸ்லிக்கு உண்டான அதே உடல் மொழி, பேச்சு ஸ்லாங் என அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து அசத்திவிட்டார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: ப்பா.. என்ன Expressions.. யாருப்பா இந்த குட்டி நர்ஸ்?.. சிநேகாவே அசந்துட்டாங்க.. செம க்யூட்

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv azhar imitates actor redin kingsley trending KPY

People looking for online information on Kalakka Povathu Yaaru, KPY, TV show, Vijay tv azhar, Vijay tv KPY will find this news story useful.