www.garudabazaar.com

ரேவதி இயக்கத்தில் கஜோல்.. மனதை நெகிழ வைக்கும் சலாம் வெங்கி டிரைலர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'மண் வாசனை' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரேவதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார்.

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

தற்போதும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வரும் ரேவதி, சமீபத்தில் பூதகாலம், மேஜர், நவரசா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க, ஒரு சில திரைப்படங்களையும் ரேவதி இயக்கி உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு, "Mitr, My Friend" என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக ரேவதி அறிமுகமாகி இருந்தார்.

இந்த திரைப்படம் தேசிய விருதினை வென்றிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, 'Phir Milenge' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள ரேவதி, தற்போது 'சலாம் வெங்கி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

ஹிந்தியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் கஜோல், விஷால் ஜெத்வா, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ராகுல் போஸ், அமீர்கான் (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் மூர்த்தி எழுதி உள்ள “The Last Hurrah” என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

'சலாம் வெங்கி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், பலரது  கவனத்தையும் பெற்று வருகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனுக்காக போராடும் தாயின் கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளது டிரைலர் மூலம் தெரிய வருகிறது. மிகவும் மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் சலாம் வெங்கி படத்தின் டிரைலர் அமைந்துள்ளது. மேலும் டிரைலரின் கடைசியில் அமீர் கான் வரும் காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

டிசம்பர் 9 ஆம் தேதியன்று, சலாம் வெங்கி திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரிக்கக் கூடிய வகையில் படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

சலாம் வெங்கி திரைப்படத்திற்கு மிதுன் இசையமைக், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

actress Revathy directorial kajol Salaam Venky movie trailer

People looking for online information on Aamir Khan, Kajol, Prakash Raj, Priyamani, Revathy, Salaam Venky will find this news story useful.