www.garudabazaar.com

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படம்.. ஹீரோவாக Hiphop Tamizha.. இயக்குனர் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசை அமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்க உள்ளார்.

Vels film international new movie hiphop tamizha in lead

Also Read | Childrens Day தினத்தன்று.. ராஷ்மிகா பகிர்ந்த 'இன்ஸ்டா' பதிவு.. வைரலாகும் கேப்ஷன்!!

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

மிகப் பெரிய அளவில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் ஐம்பது நாட்களையும் கடந்திருந்தது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, இயக்குனர் கோகுல் இயக்கும் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில், தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தற்போது அறிவித்துள்ளது.

Vels film international new movie hiphop tamizha in lead

அதன்படி, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

Vels film international new movie hiphop tamizha in lead

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Vels film international new movie hiphop tamizha in lead

டாக்டர் ஐசரி கே கணேஷ் - ஹிப் ஹாப் தமிழா - கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளராக இருந்து 'மீசையை முறுக்கு' திரைப்படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமாகி இருந்த ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் இதற்கு முன்பு 'அன்பறிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "இந்த நரிக் கூட்டத்துல வாழ்றதோட".. கேமரா முன்னாடி ராபர்ட் மாஸ்டர் சொன்ன பரபரப்பு விஷயம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vels film international new movie hiphop tamizha in lead

People looking for online information on Hiphop Tamizha, Hiphop Tamizha Adhi, Vels Film International will find this news story useful.